இலங்கை

இலங்கையின் சீர்திருத்தத் திட்டம் வெற்றிகரமான பாதையில் – IMF!

பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2024இல் 5% ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தகவல் தொடர்பாடல் திணைக்களப் பணிப்பாளர் ஜூலி கொசெக் தெரிவித்தார். 

IMF-இல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

அதே நேரத்தில், இலங்கையின் விரிவான பொருளாதார சீர்திருத்தத் திட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக கொசெக் மேலும் கூறினார்.

கொசெக் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கையின் விரிவான சீர்திருத்தத் திட்டம் பற்றி நான் கூறக்கூடியது என்னவென்றால், அது தொடர்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. பணவீக்கம் குறைவாகவே உள்ள நிலையில், அரசாங்க வருவாய் வசூலிப்பு மேம்பட்டு வருகிறது.

சர்வதேச இருப்புகளும் அதிகரித்து வருகின்றன. 2024க்குப் பிறகு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக அதிகரித்துள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

வரவு-செலவுத் திட்டத்தின் வருவாய்-மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம் 2022இல் 8.2%இலிருந்து 13.5% ஆக மேம்பட்டுள்ள நிலையில், இது ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். மேலும், கடன் மறுசீரமைப்பு செயல்முறை அநேகமாகப் பூரணமாகியுள்ளது.

ஒட்டுமொத்தமாக, திட்டத்தின் செயல்திறன் மிகவும் வலுவாக உள்ளதாகக் கூற முடியும். விரிவான நிதித் திட்டத்தின் நோக்கங்களுக்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் கூற முடியும்.

விரிவான நிதி வசதியின் ஐந்தாவது மதிப்பாய்வை நடத்த, எங்கள் குழு தற்போது இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருகிறது. அதன்படி, ஐந்தாவது மதிப்பாய்வின் காலப்பகுதி குறித்து எதிர்காலத்தில் எமது குழு அறிவிக்கும்” என்று அவர் கூறினார்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…