இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
திருப்பூர், சேலம், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 8 முகாம்களில் கட்டப்பட்டுள்ள புதிய வீடுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் திறந்து வைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிகழ்வில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.
இந்திய ரூபாயில் 44.48 கோடியில் வீடுகள் கட்டப்பட்டு, ரூ.6.58 கோடியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.