No products in the cart.
இந்தியாவில் ஒரு பவுண் தங்கத்தின் விலை 90,000 ஐ அண்மித்தது
தமிழகத்தின் சென்னையில் இன்றைய தினமும் தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, கிராமுக்கு 110 ரூபா உயர்வடைந்து ஒரு கிராம் தங்கம் 11,060 ரூபாவுக்கும் பவுணுக்கு 880 ரூபா உயர்வடைந்து
ஒரு பவுண் 88,480 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
வரலாற்றில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, தங்கம் விலையை போன்று, வெள்ளி விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, கிராமுக்கு ஒரு ரூபா அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி 166 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதுடன் ஒரு கிலோ கிராம் வெள்ளி 1 லட்சத்து 66 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.