No products in the cart.
ரயில் தடம்புரண்டதால் பரபரப்பு ; பாகிஸ்தானில் தண்டவாளம் அருகே குண்டுவெடிப்பு
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் ஷிகார்பூர் மாவட்டத்தில் இருந்து பெஷாவர் நோக்கி சென்ற ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது குண்டுதாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சிந்து-பலூசிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள சுல்தான்கோட் பகுதியில் ரெயில் சென்றபோது தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துள்ளது.
இதனால் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தது. இதில் பலர் காயம் அடைந்தனர்.
உடனே மீட்புக் குழுக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது.
பலூச் விடுதலை ராணுவத்தின் போராளிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சமீபகாலமாக ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை குறிவைத்து தாக்கினர்.
கடந்த மார்ச் மாதம் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்தி 400 பயணிகளை பிணைக்கைதிகளாக பிடித்தனர். பின்னர் பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து பயணிகளை மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.