இலங்கை

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு, கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாதத்தில் ஒன்று தசம் ஒன்ற வீதம் அதிகரித்துள்ளன.

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு செப்டம்பர் மாதத்தில் ஆறு தசம் 24 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளன.

எவ்வாறாயினும், இது கடந்த ஓகஸ்ட் மாதம் ஆறு தசம் 17 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகி இருந்த நிலையில்,

இந்த மொத்த கையிருப்பில், சீன மக்கள் வங்கியின் நாணயப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்ட சுமார் ஒன்று தசம் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் உள்ள இந்த 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி, பயன்படுத்துவதற்கான நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டு கையிருப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதானது, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேலும் உறுதிப்படுத்துவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…