நாட்டிலுள்ள 10 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வுத் மையம் அறிவித்துள்ளது.
வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா, மாத்தளை மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 11.00 மணி வரை, 10 மாவட்டங்களுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
15 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மின்னல் செயல்பாட்டினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.