இலங்கை

யாழில் இப்படியும் செய்வார்களா?

யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விஷமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

“யாழ்ப்பாணம் வரவேற்கிறது” வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணி படுகொலைக்கு நீதி கோரி “அணையா விளக்கு” போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தின் முடிவில் அப்பகுதியில் அணையா விளக்கு நினைவுத் தூபி ஒன்றும் அமைக்கப்பட்டது. அந்த நினைவுத் தூபியை விஷமிகள் அடித்து உடைத்துள்ளனர்.

இந்நிலையில்  செம்மணி படுகொலைக்கு நீதி கோரிய  அணையா விளக்கு உடைக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…