சினிமா

ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றிப்படமாக ஜெயிலர் அமைந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. 

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, சிவராஜ்குமார், மோகன்லால் என பலரும் நடித்திருந்தனர். 

உலகளவில் ரூ. 620 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்திடம் மற்றொரு கதையை நெல்சன் கூறியுள்ளார். அந்த கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துப்போக, ஜெயிலர் 2 படத்திற்கு பின் மீண்டும் நெல்சன் உடன் இணைய ரஜினிகாந்த் யோசித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. இது ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

What's your reaction?

Related Posts

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பாடசாலை தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற பெண் குழந்தை…