சினிமா

உடல்நலக்குறைவால் இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்

பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

இவர் அவரது சகோதரர் முரளியுடன் இணைந்து சபேஷ்-முரளி என்ற பெயரில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

சமுத்திரம், மாயாண்டி குடும்பத்தார், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் போன்ற பல திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.

மேலும், தனது சகோதரர் தேவா இசையமைத்த பல திரைப்படங்களில் இசை உதவியாளராக பணியாற்றியுள்ளதுடன் பல பாடல்களையும் பாடியுள்ளார்.

இவரின் மகன் கார்த்திக் சபேஷ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார்.

இவரின் திடீர் மறைவிற்கு நடிகர்களும், இசை துறையில் இருப்பவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பாடசாலை தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற பெண் குழந்தை…