உலகம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு!

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.

குறித்த நிலஅதிர்வு 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குடியிருப்பாளர்களால்  நில அதிர்வு உணரப்பட்டாலும் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லையெனவும் அந்நாட்டு வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சி

13 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க நடவடிக்கை நிறைவுக்கு வந்தமை மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் டிரம்ப் வெளியிட்ட கூற்றுகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை சடுதியாக சரிவடைந்துள்ளது. WTI கச்சா எண்ணெய்…