உலகம்

ஹமாஸ் மீதான இஸ்ரேலின் தாக்குதலை ஆதரித்த ட்ரம்ப்

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்த ட்ரம்ப், ”ஹமாஸ் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்தது. இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டார்.

இதனால் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

தற்போது, போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் போர் நிறுத்த விதிகளை மீறியதாகக் கூறி, தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டார்.

அதன்படி காசாவில் பல்வேறு இடங்களில், இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆதரித்தார்.

மேலும், ஹமாஸ் அமைப்பினர் ஒரு இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீரரைக் கொன்றார்கள். எனவே இஸ்ரேல் படையினர் திருப்பித் தாக்கினர். அவர்கள் திருப்பித் தாக்க வேண்டும்.

ஹமாஸ் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இந்த தாக்குதல் அமுலில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை எதுவும் பாதிக்காது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…