உலகம்

உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 16 பேர் பலி!

ரஷியா-உக்ரைன் இடையிலான போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் அமெரிக்கா முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன.  இதுதொடர்பாக இரு நாடுகளிடையே  விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷியா நேற்று சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் உள்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் 06 குழந்தைகள் உட்பட 16 பேர் பலியாகினர். மேலும் 34 பேர் படுகாயம் அடைந்தனர்.

ரஷியாவின் இத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி,  தாக்குதலில் பலியானோரின்  குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…