No products in the cart.
ஸ்காட்லாந்தின் வனப்பகுதியில் பெரும் காட்டுத்தீ !
ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு பெரிய வனப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்தப் பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு பொது மக்களை காவல் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
தெற்கு ஸ்காட்லாந்தின் காலோவேயில் உள்ள க்ளென்ட்ரல்லில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11.50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
கிழக்கு அயர்ஷையரில் உள்ள லோச் டூன் பகுதிக்கும் தீ பரவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஸ்காட்லாந்து பொலிஸார் தெரிவித்தனர்.மேலும், சிகரெட்டுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் மக்களை வலியுறுத்தினார்.
மெரிக் ஹில், பென் யெல்லெரி மற்றும் லோச் டீ ஆகிய இடங்களில் தீயை அணைக்க ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்துவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு இங்கிலாந்தில் 286 காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக NFCC புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன, இது 2022 ஆம் ஆண்டில் பதிவானதை விட 100 அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.