No products in the cart.
262 கிமீ வேகத்தில் வாகனம் செலுத்திய இளைஞன் கைது!
கனடாவில் மணிக்கு 262 கிலோ மீற்றர் வேகத்தில் வாகனத்தைச் செலுத்திய இளைஞரை காவல்துறை கைது செய்துள்ளனர்.
தோரோல்ட் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர், மணிக்கு 262 கிலோ மீற்றர் வேகத்தில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒன்டாரியோ மாகாணக் காவல்துறை (OPP) தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் வான் நகரில் உள்ள ஹைவே 427 வடபுற திசையில், லாங்க்ஸ்டாஃப் சாலையின் அருகே சனிக்கிழமை இடம்பெற்றதாக அதிகாரிகள் செய்தி வெளியீட்டில் கூறியுள்ளனர்.
இந்த சமப்வம் தொடர்பில் அர்ஜுன் சியான் என்ற நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவரின் ஓட்டுநர் உரிமம் 90 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டது. வாகனம் 14 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்பட்டது. அர்ஜுன் சியான், மே 6ஆம் தேதி நியூமார்கெட் நீதிமன்றத்தில் முன்னிலையாக உள்ளார்.