No products in the cart.
க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு
சற்றுமுன் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படுவது தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி குறித்த பெறுபேறுகள் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் வெளியிடப்படும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி.அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் சுமார் 2,312 மையங்களில் பரீட்சை நடத்தப்பட்டது.
அதில் மொத்தம் 333,183 பேர் பரீட்சை எழுதியிருந்த நிலையல், அவர்களில் 253,390 பேர் பாடசாலை மாணவர்கள் மற்றும் 79,793 பேர் தனியார் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.