இலங்கை

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கும்பல் – கைது

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள விடுதிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த கும்பல் ஒன்று அங்கு தங்கியிருந்த திருமணமாகாத தம்பதியை தாக்கியுள்ளனர்.

அத்துடன் அவர்களை கடத்தி, கையடக்க தொலைபேசி மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் 15 வயதுடைய மாணவி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏனைய சந்தேக நபர்கள் 33, 52, 54 மற்றும் 25 வயதுடைய பெண்கள் என்றும் அதே பகுதியைச்  சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசாரணைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் விடுதியில் தங்கியிருந்த ஆணின் குடும்பத்தின் உறவினர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக வழங்கப்பட்ட மேலதிக தகவலுக்கமைய, திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டுள்ள தம்பதி விடுதியில் தங்கியிருப்பதை அறிந்த பெண்கள், விடுதிக்குச் சென்று, அவர்களை தாக்கியுள்னளர்.

அவர்களை கடத்திச் சென்று அவர்களிடம் கொள்ளையடித்த பின்னர் விட்டுச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தாக்குதலுக்குள்ளான தம்பதி செய்த முறைப்பாட்டிற்கமைய, 5 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து கொட்டாஞ்சேனை கடலோர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…