‘டித்வா’ புயல்: சுகாதார கட்டமைப்பில் 21 பில்லியன் ரூபா இழப்பு!


‘டித்வா’ புயல் தாக்கத்தினால் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புக்கு 21 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

வைத்தியசாலைகள் உட்பட 8 சுகாதார நிறுவனங்களை மீள அமைக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் நடைபெற்ற நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

Exit mobile version