இலங்கை

வெல்லவாய பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் நபரொருவர் கொலை

மொனராகலை – வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரணவராவ சந்தியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் இன்று திங்கட்கிழமை (14) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டவர் வெல்லவாய ரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடையவர் ஆவார்.

முன்விரோதம் காரணமாக இனந்தெரியாத நபர்கள் சிலரால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…