No products in the cart.
உலக நாடுகளுக்கு ட்ரம்ப் கொடுத்த மற்றுமொரு பேரதிர்ச்சி – 15% உலகளாவிய இறக்குமதி வரி உயர்வு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உலகளாவிய ரீதியிலான இறக்குமதி வரிகளை (Tariffs) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 15 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்துள்ளார்.
தனது ‘Truth Social’ சமூக ஊடகத்தளத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படி ட்ரம்பின் விரிவான வரி விதிப்புத் திட்டங்களை ரத்து செய்த அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் முடிவை, “கடுமையான அமெரிக்க எதிர்ப்பு முடிவு” என அவர் விமர்சித்துள்ளார்.
அந்தத் தீர்ப்பை முழுமையாக மீளாய்வு செய்த பின்னரே, இந்த அதிரடி வரி உயர்வு முடிவை எடுத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
முதலில் 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அது 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவினால் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயரக்கூடும் என்பதால் உலகளாவிய வர்த்தகச் சந்தையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
















