உலகம்

கியூப கடல் எல்லைக்குள் நுழைந்த குழு – நால்வர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப் படகில் கியூப கடல் எல்லைக்குள் நுழைந்த ஒரு குழு மீது கியூப கடலோர காவல்படை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் ஆறு பேர் காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கியூபாவின் வடக்கு கடற்கரையில் ஒரு தீவுக்கு அருகே வேகப் படகில் இருந்து வந்த ஒரு குழுவை அதன் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாக கியூப அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், கப்பலில் இருந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான உண்மைகளை ஆய்வு செய்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் கூறியுள்ளார்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…