உலகம்

இங்கிலாந்து பிரதமர் பதவி விலக வேண்டும் – ஏஞ்சலா ரெய்னரே கோரிக்கை

கிரேட்டர் மான்செஸ்டரின் கோர்டன் மற்றும் டென்டன் இடைத்தேர்தலில், சிறிய கட்சியான கிரீன் கட்சியிம் ஆளும் லேபர் கட்சி மோசமாக தோல்வியடைந்துள்ளதால் பிரதமர் கியர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என முன்னாள் துணை பிரதமர் ஏஞ்சலா ரெய்னரே தெரிவித்துள்ளார்.

பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி வேட்பாளரான ஏஞ்சலிகி ஸ்டோகியாக்கு வெறும் 9,364 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில், கிரீன் கட்சி வேட்பாளரான ஹன்னா ஸ்பென்சர்க்கு 40.7 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

லேபர் கட்சி மோசமான தோல்வியை சந்தித்துள்ளதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவரும் பிரித்தானிய பிரதமருமான கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகவேண்டும் என ஏஞ்சலா ரெய்னரே வலியுறுத்தியுள்ளார்.

கிரேட்டர் மான்செஸ்டரின் கோர்டன் மற்றும் டென்டன் தொகுதியில் நேற்று நடைபெற்ற இடைத்தேர்தலில், 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரை, நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு இருக்கையை மட்டுமே வைத்திருந்த சிறிய கட்சியான கிரீன்ஸ் கட்சியிடம் ஆளுங்கட்சி தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுவரை, எதிர்க்கட்சியினரும், ஸ்டார்மர் கட்சியைச் சேர்ந்த சிலரும் பிரதமர் பதவி விலகவேண்டும் என வலியுறுத்திவந்த நிலையில், தற்போது அவரது கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் துணை பிரதமர் பதவி வகித்தவரான ஏஞ்சலா ரெய்னரேவும் இந்த கருத்தை வெளியிட்டுள்ளமை இங்கிலாந்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இடைத்தேர்தல் தோல்வி ஒரு எச்சரிக்கை என்று கூறியுள்ள ஏஞ்சலா, வாக்காளர்களுக்கு நாம் உறுதியளித்த மாற்றம் இப்போது அவர்களுக்கு தேவைப்படுகிறது. அதனால் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தலைமை மாறவேண்டிய நேரம் இது என்றும் அவர் கூறியுள்ளார்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…