உலகம்

ஈரானுக்கு தகுந்த பதிலடி – வளைகுடா நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதற்கான திட்டங்களைப் பரிசீலித்து வருவதாக வளைகுடா நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.

சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு சபை இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிப்பதற்காகப் பலகட்ட தூதரக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மீறி ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

எங்களது நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை விடயத்தில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை.

ஈரானின் இந்த அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம்” என அந்த அறிக்கை ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், வளைகுடா நாடுகளின் இந்தத் திடீர் அறிவிப்பு பிராந்திய நிலைமையை மேலும் தீவிரமடையச் செய்துள்ளது.

இதேவேளை, அனைத்து இலக்குகளையும் அடையும் வரை ஈரான் மீது தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஈரானின் புதிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானுக்கு எதிரான தாக்குதலில், முதல் 24 மணிநேரத்திற்குள் ஈரானின் 1,000 இற்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…