No products in the cart.
குவைத்தில் அமெரிக்க விமானங்கள் வீழ்த்தப்பட்டமைக்கு இதுவா காரணம்!
ஈரானுக்கு எதிரான ‘Operation Epic Fury’ இராணுவ நடவடிக்கையின் போது, அமெரிக்காவின் மூன்று F-15 போர் விமானங்கள் நட்புமுறைத் தாக்குதல் காரணமாக வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் அறிவித்துள்ளது.
ஈரானிய விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் தாக்குதல்கள் ஒருபுறம் தீவிரமாக நடந்துகொண்டிருந்த வேளையில், குவைத் வான் பாதுகாப்புப் படையினர் தவறுதலாக அமெரிக்கப் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
விமானங்களில் இருந்த 6 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேறியதுடன், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு தற்போது சீரான உடல்நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை குவைத் ஒப்புக்கொண்டுள்ளது. தற்போதைய இராணுவ நடவடிக்கையில் குவைத் பாதுகாப்புப் படைகள் வழங்கி வரும் ஆதரவிற்கும் முயற்சிகளுக்கும் அமெரிக்கா தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.
குறித்த விபத்துக்கான பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.















