கிரிக்கட்விளையாட்டு

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் தந்தையும், பிரபல சட்டத்தரணியுமான எஸ்.கே.சங்கக்காரா காலமானதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சட்டத்தரணியும் மரியாதைக்குரிய சட்ட நிபுணராகவும் இருந்த சங்கக்கார, சட்ட வட்டாரங்களிலும் சமூகத்திலும் பரவலாக அறியப்பட்டவர் ஆவார்.

அவர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் தந்தையும் ஆவார்.

அவரது உடல் கண்டியில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இறுதிச் சடங்கு நாளை மாலை 6.00 மணிக்கு கண்டியில் உள்ள மகியாவ மயானத்தில் நடைபெறும் எனவும், சடலம் மாலை 4.30 மணிக்கு வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

WTC 2025 இறுதிப்போட்டி – தென்னாபிரிக்கா அணிக்கான வெற்றி இலக்கு இதோ!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2025 இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 282 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி ஜூன் 11 முதல் 15 வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது, இதில் அவுஸ்திரேலியா மற்றும் தென்…