உலகம்

உயிருடன் இருக்கும் ஈரானின் முன்னாள் ஜனாதிபதி

இஸ்ரேல் நடத்திய வான்வெளித்தாக்குதலில் ஈரான் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை என்றும் அவர் உயிருடன் இருப்பதாகவும் ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சனிக்கிழமை இரவு தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலின் போது முன்னாள் ஜனாதிபதி கொல்லப்பட்டதாக முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன.

அஹ்மதிநெஜாத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அவர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் ஈரானிய வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் வான்வழித் தாக்குதலில் அவர் இறந்ததாக முன்னர் வெளியான செய்திகளுக்கு மாறாக, புதிய காட்சிகள் முன்னாள் ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.

வான்வழித் தாக்குதல் குறித்த முந்தைய கூற்றுகளை பொய்யாக்கும் வகையில், அஹ்மதிநெஜாத் ஒரு கல்லறைக்கு வருவதை காணொளி காட்டுகிறது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…