உலகம்

கச்சா எண்ணெய் விலை எகிறும்! கட்டாரின் எச்சரிக்கை!

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல் நிலைமை காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 150 அமெரிக்க டொலர்கள் வரை உயரக்கூடும் என்றும், இதன் மூலம் புதிய எரிசக்தி நெருக்கடி உருவாகும் அபாயம் உள்ளதாகவும் கட்டார் எரிசக்தி அமைச்சர் சாத் அல்-காபி (Saad al-Kaabi) எச்சரித்துள்ளார். 

யுத்த மோதல்கள் விரைவில் முடிவுக்கு வந்தாலும், அதன் தாக்கங்கள் வழமைக்குத் திரும்புவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, கட்டார் உள்ளிட்ட மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தியது. 

கட்டாரில் அமைந்துள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவத் தளமான ‘அல் உசெய்த்’ (Al Udeid) விமானப்படைத் தளம் மீது இன்று ஈரானால் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், அவை முறியடிக்கப்பட்டதாக கட்டார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…