உலகம்

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி!

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation Epic Fury) இராணுவ நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டதாக அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

கடந்த 11 நாட்களில் அமெரிக்க இராணுவம் ஈரானை கிட்டத்தட்ட அழித்துவிட்டது என்றும், குறிப்பாக அந்நாட்டின் விமானப்படை முற்றாகச் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிடம் தற்போது போரிடுவதற்கு எதுவுமில்லை எனத் தெரிவித்துள்ள டிரம்ப், அந்நாட்டின் 90% ஏவுகணைகள் மற்றும் 86% ட்ரோன்கள் அமெரிக்காவினால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகத் புள்ளிவிபரங்களுடன் தெரிவித்துள்ளார்.

ஈரானின் பயங்கரவாத ஆட்சியால் ஏற்பட்ட அச்சுறுத்தலைத் தடுக்கவே இந்தத் தீர்மானமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஈரானில் இனி அழிப்பதற்கு எதுவுமில்லை எனக் கூறியுள்ள டிரம்ப், தான் எப்போது வேண்டுமானாலும் இந்தத் தாக்குதலை நிறுத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சி

13 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க நடவடிக்கை நிறைவுக்கு வந்தமை மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் டிரம்ப் வெளியிட்ட கூற்றுகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை சடுதியாக சரிவடைந்துள்ளது. WTI கச்சா எண்ணெய்…