உலகம்

ஈராக்கில் அமெரிக்க இராணுவ விமானம் வீழ்த்தப்பட்டது: நால்வர் பலி!

ஈராக்கிற்குள் வீழ்ந்து நொருங்கிய அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான ‘Boeing KC-135 Stratotanker’ ரக விமானத்தில் இருந்த பணியாளர்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அமெரிக்க மத்திய கட்டளைப் பீடத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி குறித்த ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், இவ்விமானம் விபத்துக்குள்ளானபோது அதில் ஆறு அதிகாரிகள் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான இந்த விமானம், ஈராக்கின் ‘The Islamic Resistance in Iraq’ என்ற அமைப்பினால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

தமது நாட்டின் இறையாண்மை மற்றும் வான்பரப்பைப் பாதுகாப்பதற்காகவே குறித்த KC-135 விமானத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…