உலகம்

அமெரிக்காவுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எவ்விதப் பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் நிலைப்பாட்டை வழிமொழிந்துள்ள அவர், இது குறித்து தனது X (ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.

நிதி மற்றும் எண்ணெய் சந்தைகளைக் கையாளுவதற்கும், அமெரிக்காவும் இஸ்ரேலும் சிக்கியுள்ள இக்கட்டான நிலையில் (quagmire) இருந்து தப்பிப்பதற்கும் இத்தகைய ‘போலிச் செய்திகள்’ பயன்படுத்தப்படுகின்றன,” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மற்றொரு பதிவில், ஈரானின் இறையாண்மையின் மீது கைவைத்த “ஆக்கிரமிப்பாளர்களுக்கு முழுமையான மற்றும் வருந்தத்தக்க தண்டனை” வழங்கப்பட வேண்டும் என ஈரான் கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இலக்கை அடையும் வரை ஈரானிய அதிகாரிகள் தங்களது நாட்டின் மிக உயர்ந்த தலைவர் (Supreme Leader) மற்றும் மக்களுக்குப் பின்னால் உறுதியுடன் நிற்பார்கள் என்றும் சபாநாயகர் காலிபாப் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் “முக்கியமான உடன்பாட்டு புள்ளிகளை” எட்டியுள்ளதாகக் கூறியிருந்த நிலையில், ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் அதனைத் தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.  

What's your reaction?

Related Posts

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சி

13 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க நடவடிக்கை நிறைவுக்கு வந்தமை மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் டிரம்ப் வெளியிட்ட கூற்றுகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை சடுதியாக சரிவடைந்துள்ளது. WTI கச்சா எண்ணெய்…