உலகம்

யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலின் தாக்குதல்கள் தொடரும் – அமெரிக்கா

ஈரானின் இராணுவ இலக்குகள் மீதான தாக்குதல்களுக்காக, ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’  விமானம் தாங்கி போர்க்கப்பல் பிராந்திய கடல் எல்லைகளிலிருந்து தனது வான்வழி நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

குறித்த போர்க்கப்பலைக் குறிவைத்துத் தாம் க்ரூஸ் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதன் காரணமாகக் கப்பலின் நிலையை மாற்ற வேண்டியிருந்தது என்றும் ஈரான் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து அமெரிக்கா இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

இருப்பினும், அமெரிக்க அதிகாரிகள் தமது நடவடிக்கைகளுக்கு எவ்விதத் தடையுமில்லை என்றும், திட்டமிட்டபடி ஈரானிய இலக்குகள் மீது போர்க்கப்பலிலிருந்து தாக்குதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…