கனடா

கனடா எல்லையில் பெருந்தொகை சட்டவிரோத புகையிலை பறிமுதல்!

கனடாவின் புளூ வாட்டர் பாலம் (Blue Water Bridge) எல்லைச் சாவடியில் இடம்பெற்ற பெரியளவிலான பறிமுதல் நடவடிக்கை, ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என எல்லை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடா எல்லை சேவைகள் முகவர் நிறுவனம் (CBSA) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஒன்டாரியோ மாகாணத்தின் சார்னியா (Sarnia) நகரிலுள்ள பாயிண்ட் எட்வர்ட் நுழைவுத் துறையில் கடந்த 7 நாட்களில் 4.5 மில்லியன் டாலருக்கு மேற்பட்ட மதிப்புள்ள சட்டவிரோத புகையிலைப் பொருட்கள் மற்றும் நிக்கோட்டின் வேப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சட்டவிரோத பொருட்கள் அமெரிக்காவில் இருந்து கனடாவிற்குள் கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டிற்குள் சட்டவிரோத பொருட்கள் நுழைவதைத் தடுக்கவும், ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றவியல் வலையமைப்புகளை முறியடிக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கனடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.  

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…