No products in the cart.
அமெரிக்காவில் விசா ரத்தது!
அமெரிக்காவில் விசா ரத்து செய்யப்பட்ட சர்வதேச மாணவர்களில் 50 சதவீதம் பேர் இந்திய மாணவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்திய மாணவரின் விசா ரத்துக்கு நீதிமன்றம் தடை இது தொடர்பாக அமெரிக்க குடியேற்ற வழக்கறிஞர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது
அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் மற்றும் சுங்க மற்றும் குடியேற்றத்துறை, வெளிநாட்டு மாணவர்கள் குறித்து ஆய்வு செய்தது. அதற்காக அவர்களின் கடந்த நான்கு மாத கால செயல்பாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வுகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது. இதனால் பல குளறுபடிகள் ஏற்பட்டன. போராட்டத்தில் பங்கேற்காத, குற்றச்சாட்டுக்கு உள்ளாகாத மாணவர்களும் பாதிக்கப்பட்டதாக சிலர் குற்றம்சாட்டி உள்ளனர்.
அந்த வகையில் 327 வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டது. அதில் 50 சதவீதம் பேர் இந்திய மாணவர்கள்.
இதனை தொடர்ந்து சீனாவை சேர்ந்த 14 சதவீத மாணவர்கள், தென்கொரியா, வங்கதேசம் மற்றும் நேபாளத்தை சேர்ந்த மாணவர்களின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.