உலகம்

ஈரான் யுத்தத்தில் பிரான்ஸ் பங்கேற்கவில்லை – மக்ரோன்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தொடங்கிய இராணுவ நடவடிக்கையில் பிரான்ஸ் பங்கேற்கவில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தனது வான்வழித் தடத்தினை அமெரிக்காவின் யுத்தத்திற்கு அனுமதிக்கவில்லை என டொனால்ட் டிரம்ப் விமர்சித்ததைத் தொடர்ந்து, மக்ரோன் இதற்கு பதிலளித்தார்.

‘அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இந்த இராணுவ நடவடிக்கையைத் தொடங்கும்போது பிரான்சினை ஆலோசிக்கில்லை. அதனால், பிரான்ஸ் இந்த நடவடிக்கையில் எந்த வகையிலும் பங்கேற்கவில்லை’

‘இது புதிய விடயம் அல்ல, முதல் நாளிலிருந்தே இதே நிலைப்பாடு தொடர்கின்றது’ என ஜப்பானில் NHK தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துகள், டொனால்ட் டிரம்ப் முன்வைத்த விமர்சனங்களுக்கு நேரடி பதிலாகவே அமைந்துள்ளன.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…