இந்தியா

தமிழகம் முழுவதும் அதிமுக பேச்சாளர்கள் இன்று முதல் பிரச்சாரம்

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதிமுக 167 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது. கடந்த மார்ச் 30 ஆம் திகதி வேட்​புமனு தாக்​கல் தொடங்​கிய நிலையில், நிறைவடைய 02 நாட்​கள் உள்​ளன.

கடந்த 02 ஆம் திகதி முதல் மாவட்ட ரீதியாக தமிழகம் முழு​வதும் தீவிர பிரச்​சா​ரத்தை தொடங்​கியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி​. எதிர்வரும் 19 ஆம் திகதியன்று சேலத்​தில் நிறைவு செய்​கிறார்.

இதனிடையே அதி​முக​வின் நட்​சத்​திர பேச்​சாளர்​களான காளி​யம்​மாள், நடிகர் ரவி மரியா இன்று பிரச்​சா​ரத்தை தொடங்​கு​கின்​றனர்.

அதி​முக செய்​தித்​தொடர்​பாளர் கல்​யாணசுந்​தரம் நாளை முதல் ​21 ஆம் திகதி வரை சென்​னை, கோவை, திருச்​சி, ஈரோட்டிலும், வைகைச்​செல்​வன் நாளை மறுதினம் 6 முதல் 21 ஆம் திகதி வரை சென்​னை, திரு​வள்​ளூர், செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரத்திலும், கொள்​கைப்​பரப்பு துணை செய​லா​ளர்  நடிகை கௌதமி எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையும் பிரச்​சா​ரம்​ மேற்​கொள்​ள உள்​ளனர்.

What's your reaction?

Related Posts

நகைக்கடை உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொலை

இந்தியாவின் சூரத் பகுதியில் நேற்று இரவு (07) நகைக் கடை ஒன்றை கொள்ளையடிக்க வந்த கும்பல், கடை உரிமையாளரை சுட்டுக் கொலை செய்து அப்பகுதியிலிருந்து தப்பியோடியுள்ளனர். ஆயுதங்களுடன் கூடிய நான்கு பேர் அந்தக் கடைக்குள் நுழைந்து, உள்ளே இருந்தவர்களை…