உலகம்

ஈரான் இராணுவத் தளபதிகள் கொலை செய்யப்பட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு

டெஹ்ரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில், ஈரானை தூரநோக்கற்ற முறையில் வழிநடத்திய பல இராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைத்தளத்திலேயே டொனால்ட் டிரம்ப் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

டெஹ்ரான் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களில் மேலும் பல இலக்குகள் அழிக்கப்பட்டதாகவும் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார் .

உடன்படிக்கைகளுக்கு வருவதற்கு அல்லது ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கு டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு வழங்கிய 48 மணிநேரக் கால அவகாசம் முடிவடைவதற்கு முன்னரே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

எவ்வாறாயினும், இந்தத் தாக்குதல் தொடர்பில் ஈரான் அரசாங்கம் இதுவரை எவ்வித உறுதிப்படுத்தலையும் அல்லது மறுப்பையும் வெளியிடவில்லை.

What's your reaction?

Related Posts

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சி

13 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க நடவடிக்கை நிறைவுக்கு வந்தமை மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் டிரம்ப் வெளியிட்ட கூற்றுகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை சடுதியாக சரிவடைந்துள்ளது. WTI கச்சா எண்ணெய்…