உலகம்

சுயநினைவற்ற நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஈரானின் புதிய உச்ச தலைவர்-உடல்நிலை மோசம்

அமெரிக்க – இஸ்ரேலியத் தாக்குதல்களில் காயமடைந்த ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி, தற்போது சுயநினைவற்ற நிலையில் புனித நகரமான கோமில் (Qom) மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தூதரகக் குறிப்பொன்றை மேற்கோள் காட்டி, 56 மொஜ்தபா கமெனி சுயநினைவின்றி இருப்பதாகவும், கடுமையான மருத்துவ நிலைக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் ‘த டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானின் உச்ச தலைவர் தலைமறைவாகியுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அவரது இருப்பிடம் வெளிப்படுத்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.

மத்திய நகரமான கோம், தெஹ்ரானுக்கு தெற்கே 87 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரம் ஷியா இஸ்லாத்தில் புனிதமானதாகக் கருதப்படுவதுடன் இஸ்லாமியக் குடியரசின் மதத் தலைநகராகவும் அறியப்படுகிறது.

இந்நிலையில் “மொஜ்தபா கமெனி தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார், ஆட்சியில் எந்தவொரு முடிவெடுக்கும் செயலிலும் அவரால் ஈடுபட முடியாது,” என அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.

இந்த ஆவணம், வளைகுடா நட்பு நாடுகளுடன் பகிரப்பட்ட அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத் தகவல்களின் அடிப்படையில் அமைந்ததாக நம்பப்படுகிறது.

உச்ச தலைவரின் இருப்பிடம் குறித்த தகவல் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவு நிறுவனங்களுக்கு அண்மைய நாட்களில் மாத்திரமே தெரிந்திருந்ததாகவும், ஆனால் அது இதுவரை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

மொஜ்தபா காமேனி எந்தவொரு பொதுவெளியிலும் தோன்றவில்லை என்பதுடன் அவர் கூறியதாகக் கூறப்படும் செய்திகளை மட்டுமே ஈரான் அரசு ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

இதனிடையே, மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா கமேனியின் உடலை கோமில் அடக்கம் செய்யத் தயாராகி வருவதாக ‘த டைம்ஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…