கனடாவின் விமான நிலைய ஓடுதளங்களில் (Runway) பாதுகாப்பு விதிமீறல்கள் மற்றும் விபத்து அபாயங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகப் புள்ளிவிபரங்கள் எச்சரிக்கின்றன.
‘ரன்வே ஊடுருவல்’ (Runway Incursions) எனப்படும்—அனுமதியின்றி ஒரு விமானமோ, வாகனமோ அல்லது நபரோ ஓடுதளத்திற்குள் நுழையும் சம்பவங்கள்—கடந்த 2024-ஆம் ஆண்டில் 639-ஆக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
பெரும் விபத்துகளாக மாறக்கூடிய ‘அதி-ஆபத்தான’ சம்பவங்களின் எண்ணிக்கை 2018 முதல் ஆண்டுக்கு ஒன்று என்ற அளவில் குறைந்திருந்தாலும், ஒட்டுமொத்த விதிமீறல் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் (TSB) தலைவர் யோன் மாரியர் தெரிவித்துள்ளார்.