கனடாவின் தொராண்டோ நகரில் பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாமல் இருந்த இரண்டு பழைய மர்மக் கொலை வழக்குகளில் பலியான பெண்களின் அடையாளங்களை, நவீன மரபியல் தொழில்நுட்பமான ஐ.ஜீ.ஜீ. மூலம் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
இதில் 90 ஆண்டுகளுக்கு முன்பு கணவரால் கொடூரமாகக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட பெண் ஒருவரின் மர்மமும் அடங்கும்.
கடந்த 1995-ஆம் ஆண்டு, தொராண்டோவில் உள்ள ‘டான்ஃபோர்த் மற்றும் காக்ஸ்வெல்’ பகுதியில் பழைய கார் விற்பனையகக் கட்டடம் ஒன்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், பூமிக்கு அடியில் பெண் ஒருவரின் எலும்புக்கூடு புதைக்கப்பட்டிருப்பதை அவதானித்தனர்.
