கனடா

மெக்சிகோவில் கடத்தப்பட்ட கனேடிய பணியாளர்கள்: ஒரு துயரச் செய்தி

கனடாவின் வான்கூவரை மையமாகக் கொண்ட நிறுவனம் ஒன்றின் 10 பணியாளர்கள் மெக்சிகோவில் கடத்தப்பட்ட நிலையில், அவர்களில் 9 பேர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. 

வான்கூவரை மையமாகக் கொண்ட Vizsla Silver என்னும் நிறுவனம் சார்பில், மெக்சிகோவின் Sinaloa மாகாணத்திலுள்ள Concordia என்னுமிடத்தில் சுரங்கப் பணி செய்துகொண்டிருந்த 10 கனேடியர்கள் ஜனவரி மாதம் 23ஆம் திகதி கடத்தப்பட்டார்கள். 

இந்நிலையில், அவர்களில் ஒன்பது பேர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக Vizsla Silver நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், காணாமல் போன 10ஆவது கனேடியரை தேடும் முயற்சி தொடர்வதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

விடயம் என்னவென்றால், பிப்ரவரி மாதமே 10 பேருடைய உயிரற்ற உடல்கள் Concordia என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்போதுதான் அவர்கள் அனைவருடைய அடையாளங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இது கடத்தல் கும்பல் ஒன்றின் வேலையாக இருக்கலாம் என மெக்சிகோ அதிகாரிகள் கருதுகிறார்கள். 

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…