No products in the cart.
மத்திய கிழக்கு பதற்றம்: லெபனான் அமைதி முயற்சி ஆரம்பம்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய மிகக் கடுமையானத் தாக்குதல்களுக்கு மத்தியில், லெபனான் அரசாங்கம் போர் நிறுத்தத்தை எட்டுவதற்கான இராஜதந்திர முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமானத் தாக்குதலுக்குள்ளான இடங்களை நேரில் பார்வையிட்ட லெபனான் உள்துறை அமைச்சர் அஹ்மத் ஹஜ்ஜார், நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்துக் கருத்துத் தெரிவித்தார்.
“எமது முதன்மையான கோரிக்கை மற்றும் இலக்கு போர் நிறுத்தம் மட்டுமே. எமது நாட்டுக்கு பாதுகாப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த உலகத்தின் எல்லை வரைச் செல்ல வேண்டியிருந்தாலும் நாம் அதற்குத் தயாராக இருக்கிறோம்” என அவர் வலியுறுத்தினார்.
லெபனான் மிகவும் தீவிரமான இராஜதந்திரப் பாதையில் பயணித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
லெபனான் அதிகாரிகளின் தகவல்படி, இஸ்ரேலுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு லெபனான் ஒரு முக்கிய நிபந்தனையை முன்வைத்துள்ளது.
அதாவது, முன்னதாகவே ஒரு முறையான போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும். அவ்வாறான ஒரு சூழலில் மட்டுமே லெபனான் அதிகாரிகள் இஸ்ரேலுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அறியப்படுகிறது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் லெபனான் மற்றும் இஸ்ரேல் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா மத்தியஸ்தம் செய்யவுள்ளது.