உலகம்

ட்ரம்பின் புதிய அவதாரத்தால் வெடித்துள்ள சர்ச்சை ; அன்று இலங்கை இன்று அமெரிக்கா

திருத்தந்தை 14ஆம் லியோ குறித்து அமெரிக்க ஜனாதிபதிப டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த விமர்சனங்கள் மற்றும் சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்த ஒரு படம் ஆகியவை சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன.

‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் ட்ரம்ப் பகிர்ந்த படத்தில் மருத்துவமனை படுக்கையில் இருக்கும் ஒரு நபரின் மீது ட்ரம்ப் கைகளை வைத்திருப்பதும், அவரது கைகளிலிருந்து ஒளி வீசுவதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது அவர் தன்னை இயேசுவை போல சித்தரிப்பதாக பலதரப்பிலும் விமர்சனங்கள் எழுந்தன.

இது மட்டுமின்றி ஜனாதிபதி ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், போப் லியோ “குற்றங்களுக்கு எதிராக மென்மையானவர்” என்றும், அவர் ஒரு “தீவிர இடதுசாரி” போலச் செயல்படுவதாகவும் சாடியிருந்தார். மேலும், போப் ஒரு அரசியல்வாதியாக இல்லாமல், போப்பாக மட்டும் இருக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து அல்ஜீரியா செல்லும் விமானத்தில் செய்தியாளர்கள் கேட்டபோது, போப் லியோ “ட்ரம்ப் நிர்வாகத்திற்கோ அல்லது சுவிசேஷத்தின் செய்தியை உரக்கச் சொல்வதற்கோ நான் பயப்படவில்லை. அதுவே எனது பணி,” என்று போப் திட்டவட்டமாகக் கூறினார்.

What's your reaction?

Related Posts

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சி

13 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க நடவடிக்கை நிறைவுக்கு வந்தமை மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் டிரம்ப் வெளியிட்ட கூற்றுகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை சடுதியாக சரிவடைந்துள்ளது. WTI கச்சா எண்ணெய்…