இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 06 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் 06 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சஹரான் ஹாஷிம் தலைமையிலான தீவிரவாதிகளால் 08 இடங்களில் 10 தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம், கட்டுவாபிட்டியில் உள்ள புனித செபஸ்தியன் தேவாலயம், மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயம், அதேபோன்று ஷங்ரி-லா, கிங்ஸ்பெரி மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன.

தெமட்டகொடை மற்றும் தெஹிவளையில் மேலும் இரண்டு தற்கொலை குண்டுவெடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த தாக்குதல்களால் 273 பேர் உயிரிழந்ததுடன் 500 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் அவர்களை நினைவுகூரும் வகையில் இன்று திங்கட்கிழமை 21ஆம் திகதி காலை 8.45 முதல் 8.47 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு தேசிய கத்தோலிக்க திருச்சபை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…