உலகம்

ஹீத்ரோ விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – எதிர்வரும் நாட்களும் குறித்தும் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போருக்கு மத்தியில் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன்படி, மார்ச் மாதத்தில் மட்டும் இணைப்புப் பயணிகளின் எண்ணிக்கை பத்து சதவீதம் உயர்ந்துள்ளது.

ஹீத்ரோ விமான நிலையத்தின் தகவல்படி, கடந்த மாதம் அதன் நான்கு முனையங்கள் வழியாக மொத்தம் 66 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை விட 6.9 வீதம் அதிகமாகும்.

மேலும் இது ஹீத்ரோ விமான நிலையத்தின் வரலாற்றிலேயே மிகவும் பரபரப்பான மார்ச் மாதமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த போர் முடிவுக்கு கொண்டுவராவிட்டால், வரும் மாதங்களின் நிலைமை நிச்சயமற்றதாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போர் காரணமாக விமான எரிபொருளில் ஏற்பட்ட பாதிப்பு, விமான நிலையத்தின் செயல்பாட்டைப் பாதிக்கவில்லை, மேலும் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக அரசாங்கம் மற்றும் விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பதாக ஹீத்ரோ விமான நிலையத்தின் தலைமை நிர்வாகி தோமஸ் வோல்ட்பி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மத்திய கிழக்கு போர் நெருக்கடி பயணப் போக்குகளை மாற்றி வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சி

13 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க நடவடிக்கை நிறைவுக்கு வந்தமை மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் டிரம்ப் வெளியிட்ட கூற்றுகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை சடுதியாக சரிவடைந்துள்ளது. WTI கச்சா எண்ணெய்…