உலகம்

அமெரிக்கா பல்கலைக்கழகம் அருகே துப்பாக்கி சூடு ; 9 பேர் படுகாயம்

அமெரிக்காவின் இண்டியானா மாகாணம் புளுமிங்டன் நகரில் இண்டியானா பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் அருகே இன்று அதிகாலை சைக்கிள் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

சைக்கிள் போட்டியில் பங்கேற்க ஏராளமானோர் பல்கலைக்கழகம் முன் திரண்டிருந்தனர்.

அப்போது அங்கு திரண்டிருந்தவர்களை குறிவைத்து திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கி சூட்டால் அதிர்ச்சியடைந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

ஆனாலும், இந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற பொலிஸார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றது யார்?, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…