உலகம்

அமெரிக்காவில் விமானத்தில் திடீர் தீ விபத்து

அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோ விமான நிலையத்தில் 300 பேருடன் புறப்படத் தயாராக இருந்த விமானம் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அப்போது விமானம் ரன்வேயில் செல்லும்போது திடீரென என்ஜினில் தீ ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

இதனையடுத்து பயணிகளை டெல்டா விமானத்தில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

விமானத்திலிருந்து அவசர சறுக்குகளில் பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். காயங்கள் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

விமான மீட்பு மற்றும் தீயணைப்பு குழு உடனடியாக விரைந்து செயல்பட்டதால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில் தீ விபத்து தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

What's your reaction?

Related Posts

சீன கப்பல்களுக்கு துறைமுக கட்டணம் டிரம்பின் அதிரடி திட்டம்

அமெரிக்க துறைமுகங்களில் சீன கப்பல்களை நிறுத்த, கட்டணம் விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து வருகின்றன. சீன பொருட்களுக்கு இதுவரை இருந்த 145 % வரியை 245 % ஆக…