உலகம்

ஆகஸ் கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குரியில்

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள ஆகஸ் (AUKUS) பாதுகாப்பு கூட்டணியின் எதிர்காலம் குறித்து பல்வேறு சவால்கள் எழுந்துள்ளதுடன், இத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுள்ள போதிய முதலீடுகள் செய்யப்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அணு இயக்கம் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவது இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.  இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அதிகரிக்கும் தாக்கத்தை சமநிலைப்படுத்தும் நோக்கத்துடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதுடன்,  குறிப்பாக, அவுஸ்திரேலியாவிற்கு அணு நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பத்தை வழங்குவது இதன் மைய அம்சமாகும்.

ஆனால், இந்த திட்டத்தின் முன்னேற்றத்தில் பாரிய சிக்கல்கள் உருவாகியுள்ளன. மிகப்பெரிய நிதி முதலீடு தேவைப்படும் இந்த திட்டத்தில், போதிய அளவு முதலீடு இல்லாதது குறித்து அவுஸ்ரேலியா கவலை வெளியிட்டுள்ளது.

மேலும், தொழில்நுட்ப பரிமாற்றம், உற்பத்தி திறன் மற்றும் திறமையான பணியாளர்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களாலும் திட்டம் தாமதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனுடன், பிரித்தானியாவின் பாதுகாப்பு தொழில்துறை ஏற்கனவே பல முக்கிய திட்டங்களில் ஈடுபட்டிருப்பதால், இந்த புதிய திட்டத்தை முழுமையாக கையாளுவதில் சவால்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலை தொடர்ந்தால், ஆகஸ்  (AUKUS) கூட்டணியின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக, அவுஸ்திரேலியா இந்த திட்டத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதால், தாமதங்கள் ஏற்படம் பட்சத்தில் பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியாவுக்கு  இடையிலான உறவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளன.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…