கனடா

ஒன்றாரியோவில் சட்டவிரோதமாக டாக்ஸி சேவை வழங்கிய நபருக்கு அபராதம்

கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்திலுள்ள நார்த் பே (North Bay) நகரில், உரிய உரிமங்கள் இன்றி சட்டவிரோதமாக வாடகை வாகனச் சேவை வழங்கி வந்த நபர் மீது காவல்துறையினர் 12 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நார்த் பே பகுதியில் உரிமம் பெறாமல் டாக்ஸி மற்றும் ரைட்ஷேர் (Rideshare) சேவைகள் இயக்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து, கடந்த ஏப்ரல் 24 அன்று காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் ஒரு நபர், நகராட்சி விதிகளின்படி ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன உரிமையாளர் உரிமம் ஆகிய இரண்டையும் பெறாமல் பொதுமக்களுக்குப் போக்குவரத்துச் சேவை வழங்கியது கண்டறியப்பட்டது.

போக்குவரத்து சட்டங்கள் மற்றும் நகராட்சி விதிகளை மீறியதற்காக அந்த நபர் மீது மொத்தம் 12 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் இயக்கியமை தொடர்பில் 6 வழக்குகளும், உரிய உரிமையாளர் உரிமம் இன்றி சேவை வழங்கியமை தொடர்பில் 6 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 630 டாலர்கள் வீதம், அந்த நபருக்கு மொத்தம் 7,560 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யவே இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…