கனடா

கியூபெக்கில் குறைந்தபட்ச ஊதியம் உயர்வு

 கனடாவின் கியூபெக் மாகாணத்தில் குறைந்தபட்ச ஊதியம் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு சுமார் 2.5 லட்சம் தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியூபெக் அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தபடி, குறைந்தபட்ச ஊதியத்தில் ஒரு மணி நேரத்திற்கு 0.50 டொலர்களால் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுவரை 16.10 டொலராக இருந்த ஒரு மணித்தியால சம்பளம் 16.60 டொலராக உயர்த்தப்பட உள்ளது.

இந்த 3.11 சதவீத ஊதிய உயர்வு மூலம் மாகாணம் முழுவதும் உள்ள சுமார் 2,58,900 தொழிலாளர்கள் நேரடியாகப் பயனடைவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஊதிய உயர்வு ஒருபுறம் மகிழ்ச்சியைத் தந்தாலும், கியூபெக்கின் சமூகப் பொருளாதார ஆய்வு நிறுவனமான IRIS வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாண்ட்ரியல் (Montreal) போன்ற நகரங்களில் ஒரு நபர் வறுமைக் கோட்டிற்கு மேல் வசதியாக வாழ வேண்டுமானால், அவர் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது 30 டொலர் ஈட்ட வேண்டும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

தற்போது உயர்த்தப்பட்டுள்ள 16.60 டொலர் என்பது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இருக்காது எனச் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…