கனடா

கனடாவில் 1 லட்சத்திற்கும் அதிகமான டொயோட்டா வாகனங்கள் தொடர்பில் எச்சரிக்கை

 கனடாவில் விற்பனை செய்யப்பட்ட 1,00,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை, சஸ்பென்ஷன் ஆர்ம் (Suspension arm) பகுதியில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திரும்பப் பெறுவதாக டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

வாகனத்தின் பின்சக்கர சீரமைப்பின் போது லாக் நட்டுகள் சரியாக இறுக்கப்படாவிட்டால், அந்தப் பகுதியில் துருப்பிடித்து தேய்மானம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் வாகனம் ஓடும்போதே சஸ்பென்ஷன் பாகம் பிரிந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் என்றும் கனடா போக்குவரத்து திணைக்களம் எச்சரித்துள்ளது.

இந்தத் திரும்பப் பெறுதல் நடவடிக்கையில் 2010-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட லெக்சஸ் HS 250h மாடல்களும், 2006 முதல் 2011 வரை தயாரிக்கப்பட்ட RAV4 மாடல்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே டொயோட்டா நிறுவனம் பல்வேறு பாதுகாப்புச் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் கேமரா கோளாறு காரணமாக 12,000 டண்ட்ரா டிரக்குகளையும், பிப்ரவரியில் கதவு திறக்கும் அபாயம் காரணமாக 20,000 பிரியஸ் மாடல்களையும் இந்நிறுவனம் திரும்பப் பெற்றது.

மேலும், மார்ச் மாதத்தில் இருக்கை பாதுகாப்பு குறைபாடு காரணமாக 40,000 ஹைலேண்டர் வாகனங்களும் திரும்பப் பெறப்பட்டன.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சஸ்பென்ஷன் கோளாறு குறித்த மேலதிக விபரங்களை வாடிக்கையாளர்கள் டொயோட்டாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…