கனடா

இளைஞர்களிடையே கஞ்சா பயன்பாடு அதிகரிப்பு

கனடாவில் இளம் தலைமுறையினர் மத்தியில் கஞ்சா போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் சில மாகாணங்களில் கஞ்சா சார்ந்த திண்பண்டங்கள்’ உற்பத்தி செய்யயும் சட்டப்பூர்வமாக விற்பனை செய்ய அனுமதியளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இளம் மாணவர்கள் மத்தியில் கஞ்சா பயன்பாடு 26% அதிகரித்துள்ளதாக அண்மைய ஆய்வு ஒன்று தெரியவைத்துள்ளது.

இந்த ஆய்வு ஜாமா நெட்வர்க் ஓபன் JAMA Network Open என்ற மருத்துவ பத்திரிகையில் வெளியானது. கஞ்சா கலந்த சாக்லேட்டுகள், சோடா, டெசர்ட் என பல்வேறு உற்பத்திகள் இளம் தலைமுறையினரை அதிகம் கவர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கஞ்சா கலந்த உணவுப் பொருட்களின் பயன்பாடு 43 வீதமாக அதிகரித்துள்ளது. 12 முதல் 17 வயது வரை 1,06,000 மாணவர்களை கொண்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

கியூபெக் மாகாணத்தில் மட்டும் இந்த அளவில் மாற்றம் இல்லை. காரணம், அங்கு இன்னும் இந்த வகை தயாரிப்புகள் விற்பனைக்கு அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…